ஸ்ரீதேவி நிருத்யாலயாவின் இரு சிறந்த அரங்கேற்றம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஆக
2013
00:00

ஸ்ரீதேவி நிருத்யாலயா நடனபள்ளி என்ற பெயரை கேட்டவுடன், மனத்திரையால் தோன்றுபவர் குரு ஷீலா உன்னிகிருஷ்ணன். மெலட்டூர் பாணி நடனக்கலையை, குரு சுந்தரத்திடமும், குச்சுபுடி நடனக்கலையை வேம்புட்டி சின்ன சத்யத்திடமும் பயின்றவர். நடனக்கலையை, அதன் தரம் குறையாமல் கற்றுக் கொடுப்பதில், வல்லவர். 300 தனிநபர் நடனங்கள், ஏழு கருத்துக் கோவை நடனங்கள், 12 நாட்டிய நாடகங்கள் என்ற நாட்டிய சாஸ்திர முறையிலிருந்து விலகாமல், பார்ப்பவர்களின் மனதை சிறை பிடிப்பவர். பரதத்தில், முதுகலை பட்டம் பெற்று, ஆராய்ச்சியும் செய்து வருகிறார். மிகப்பெரிய, நடனப்பள்ளியை நடத்துபவர் குரு ஷீலா.
இவரது மூத்த மாணக்கியர் இருவரின் அரங்கேற்றம், வெகு விமரிசையாக நடந்தது. ராஜதர்ஷிணி, ஸ்னேகா ரங்கராஜன் இருவரும் முறையே பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கிறவர்கள். நட்டுவாங்கம் நடன அமைப்பு குருஷீலா. குரலிசையில், சித்ராம்பேரி மற்றும் முரளியும், மிருதங்கத்தில் குருபரத்வாஜ், வீணையில் அனந்த நாராயணன், குழலில் தேவராஜுவும் இணைந்து சிறப்பித்தனர்.
ராஜ தர்ஷிணி கம்பீர நாட்டை ராகத்தில் அமைந்த, ஸ்ரீ விக்நராஜம்பஜே பாடலுக்கு, குரு ஷீலா அதை மல்லாரி அமைப்பில் வடிவமைத்ததை, நாதஸ்வர கலைஞர் எம்.பாலசுப்ரமணி தவிலில், எஸ்.பிரபு மிக கம்பீரமாக சுவாமி புறப்பாட்டிற்கு, உற்சவரை பல்லக்கில் ஏற்றி, அதை அழகாக அசைத்து தூக்கி வருவதை, விக்றராஜ மல்லாரியாக, நமக்கு பாடலில் பொருள் நிறைந்த அழகுவரிகள், செவிகளில் சொரிய அதை மிக அழகாக ஆடி, ரசிகர்களின் கைதட்டலைப் பெற்றார். நாதஸ்வர இன்னிசையில் மங்களகரமான சூழ்நிலை மனதை வருட, தஞ்சை நால்வரின் ராகமாலிகையால் அமைவதற்கு, மிக நேர்த்தியாக ஆடினார்.
குரு ஷீலா அமைந்திருந்த, ஜதியை மிக அழகாக ஆடி சிறப்பித்தார். சப்தம் இந்த அழகான நடன வடிவத்திற்கு, மதுரை முரளீதரன் இயற்றியுள்ள "தேவிதாயே 'ராகமாலிகையில் அமைத்ததற்கு நடனம் ஆடினார். முரளீதரன் மிகச்சிறந்த நடனக்கலைஞர், அதனால் நடனமாடும் நடன வடிவங்கள், எப்படி இருக்க வேண்டும். எதை ரசிகர்கள் அதிகம் விரும்புகின்றனர் என்பது தெரிந்து, புரிந்து, பாடல்களை இயற்றியுள்ளதால், நடனமாடுபவருக்கு மிக எளிதாக உள்ளது.
ராஜதர்ஷிணியின் நடன உருப்புகள் அனைத்தையும், ராகமாலிகையில் அமைத்து, மாளிகா எனும் தலைப்பில், தில்லானா வரை ராகங்களின் வர்ண ஜாலங்கள் செவிக்கும், நடனம் கண்ணிற்கும் விருந்து படைத்தது என்றால், அது மிகையில்லை. ஸ்னேகா தோடயமங்களத்துடன், தன் நடனத்தை துவக்கினார். அன்னமய்யாவின் பாடல், ராகமாலிகை சப்தம், இதைத் தொடர்ந்து வர்ணம், இதற்கு தன் நடனத்திறமையை முழுவதும் வெளிக்கொணர்ந்து ஆட கலைஞர்கள் முனைவர். அதற்கு ஏற்றாற் போல், சாருகேசி ராகத்தில் மிகச்சிறப்பான ஆலாபனையை முரளி வழங்க, அது தேவகானமாய் அந்த மாலை வேளையை, அரங்கம் முழுவதும் நிரம்பியது.
வீணையில் அனந்தநாராயணன் , அழகாக வாசித்ததால், சாருகேசி ராகம் அங்கு அனைவருக்கும் விரத தாபத்தை சிறப்பாக விளக்கியது. குழலும் அழகு சேர்க்க, முன்னம் பயின்றது எல்லாம் நாடகம் என்பதை அவர் அனுபவித்து ஆடி, நம்மையும் காட்சிக்குள் அழைத்துச் சென்றுவிட்டார். நிறைவாக பூபாளராகதில்லானா பத்மநாகமேணி அலங்காரம், பத்மநாப பூபாளம் பரிதை முரளிவதன என்ற சரண வரிகளில், மிக அழகான நடையில் மிக விறுவிறுப்பாய் ஆடி, தன்னிகழ்ச்சியை முடித்தார். குரு ஷீலாவின் நடன அரங்கேற்றங்கள், ஏதோ ஒரு பெரிய நடன நிகழ்ச்சியை கண்டுகளித்தார் போல் அமைவது சிறப்பாகும்.
- ரசிகப்பிரியா

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X