லேனா தமிழ்வாணனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

லேனா தமிழ்வாணனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

Added : பிப் 20, 2014 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
லேனா தமிழ்வாணனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

சென்னை: உலகத் தமிழ் பல்கலைக்கழகம் சார்பில், எழுத்தாளரும், மணிமேகலை பிரசுரம் ஆசிரியர் குழு தலைவருமான, லேனா தமிழ்வாணனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் நேற்று வழங்ப்பட்டது. அமெரிக்காவில் இயங்கி வரும், உலக தமிழ் பல்கலைக்கழகம், பல்வேறு துறைகளில் சாதனைப் புரிந்தவர்களுக்கு, டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இப்பல்கலைக் கழகம் சார்பில், சென்னையில் நேற்று நடந்த விழாவில், தொழில், கல்வி, மருத்துவம், விஞ்ஞானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், சாதனை புரிந்து கொண்டிருக்கும், 21 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது. எழுத்துத் துறையில் சாதனை புரிந்து வரும், லேனா தமிழ்வாணனுக்கு, உலக தமிழ் பல்கலை கழகத்தின் நிறுவனர், செல்வின் குமார், கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார். விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தமிழக முன்னாள் உள்துறை செயலர் மலைச்சாமி பேசுகையில், ""இவர்கள் அனைவரும், சிந்தனை, இலக்கு, வெற்றி, சாதனை படைத்து, தற்போது சரித்திரம், சகாப்தம் படைக்க உள்ளனர். இவர்கள் செய்த சேவைக்கான ஊக்கப்பரிசே, இந்த கவுரவ டாக்டர் பட்டம்,'' என்றார்.
விழாவில், சென்னை பல்கலைக்கழக பேராசிரியர், ராஜலட்சுமி, உலக தமிழ் பல்கலைக் கழகத்தின் இயக்குனர், சாந்தி ஒமகண்டம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthiban S - arumuganeri,இந்தியா
20-பிப்-201404:24:20 IST Report Abuse
Parthiban S "லேட்டானாலும், 'லேனா'வுக்கு உகந்ததே டாக்டர் பட்டம்... 'கற்கண்டு' வாழ்த்துக்கள்..."
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X